Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .

0

'- Advertisement -

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .

 

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம். ஏத்தாப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மா.இளவரசன் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது:

 

எங்கள் பகுதியில் ஊரின் மேற்கு பகுதியில் வடக்கு காட்டிற்கு செல்லக்கூடிய (சர்வே எண்.451/22) என்ற பாதையை இதே பகுதியில் உள்ள தற்போது சேலத்தில் வசித்து வரும் அப்பாவு உடையார் என்பவரின் மகன் நாகேந்திரன் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார். நாங்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலமுறை அவரிடம் கூறியும் ஆக்கிரமிப்பை எடுக்க மறுக்கிறார் .

Suresh

அதனால் கலெக்டர் அம்மா அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள பொது பாதையை பொதுமக்கள் நலன் கருதி

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை அகற்ற உத்திரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . ஆக்கிரமிப்பு பாதையை அளந்து அத்தெடுத்து சரியாக கட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்.

 

மேலும் ஆக்கிரமிப்பு செய்து வரும் நபர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து பொதுமக்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.