நாளை திருச்சி சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் மாலை 4 மணி வரை மின் தடை . பகுதிகள் விபரம்….
சீரான மின் விநியோகத்திற்காக மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் நாளை 20 ம் செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின்தடை .
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
திருச்சி மன்னாா்புரம் துணை மின்நிலையத்தில் அவசரகால பராமரிப்புப் பணிகள் காரணமாக மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சி.எச். காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகா், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோா்ஸ் சாலை, கேசவ நகா், காஜா நகா், ஜே.கே. நகா், ஆா்.வி.எஸ். நகா், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி. காலனி, காஜாமலை, தா்கா சாலை, ஆட்சியா் பங்களா, மன்னாா்புரம் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 20-ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .