Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மே தினத்தை கொண்டாடுகிற தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. மே தின பொதுக்கூட்டத்தில் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் .

0

'- Advertisement -

வருகின்ற சட்டமன்ற தேர்தலில்

திமுகவிற்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

 

அதிமுக மே தின கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு

 

 

திருச்சி மாநகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் திருச்சி கீழப்புதூர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அன்பழகன், கலீலுல் ரகுமான், ரோஜர் ,ஏர்போர்ட் விஜி ,எம்ஆர்ஆர் முஸ்தபா,

ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள்

பேரவை என்ஜினியர் கார்த்திகேயன்,

இளைஞரணி ரஜினிகாந்த்,

கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி , ஐ.டி.வெங்கட் பிரபு, இலக்கிய அணி பாலாஜி,

வெல்லமண்டி பெருமாள், தென்னூர் அப்பாஸ், ஜெரால்டு மில்டன் சகாபுதீன்,ஜான் எட்வர்டு உள்ளிட்ட டோர் முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் மாநகர், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசும்பொழுது,

மே தினத்தை கொண்டாடுகிற தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுக உழைக்கும் கட்சி உழைப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி. அதற்கு உதாரணமாக விளங்கியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்கள் வழியில் இன்று எடப்பாடி செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி வருவது நிச்சயம் என்று பேசினார்.

 

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் பேசும் பொழுது, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றாமல் மக்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக சொத்துவரி தண்ணி வரி, மின் கட்டண உயர்வு இப்படி பல்வேறு வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளனர்.

எனவே

பொதுமக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பேசினார்.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் பேசும் பொழுது,திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வில்லை. மாறாக அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி வைத்தனர்.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை பொதுமக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள். மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியை பொதுமக்கள் கொண்டு வருவார்கள் என்று பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்திரன், சில்வர் சதீஷ்குமார்,உறையூர் சாதிக் அலி, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ,

எஸ் எம் டி மணிகண்டன் ,

அப்பாகுட்டி, உடையான் பட்டி செல்வம், கே டி.எ.ஆனந்தராஜ் ,பாலக்கரை ரவீந்திரன்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,அக்பர் அலி ,கீழக்கரை முஸ்தபா,ரமணி லால்,சரவணன், கிராப்பட்டி கமலஹாசன்,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,தில்லை விஸ்வா,

தென்னூர் ஷாஜகான்,ஜெயக்குமார்,சீனிவாசன்,ராஜ்மோகன்,சண்முகம்

விநாயகமூர்த்தி, என்.டி.மலையப்பன், .நாகராஜ், நார்த்தமலை செந்தில்குமார், சுந்தர வடிவேல், கல்லுக்குழி முருகன், பிரகாஷ் காளி நாராயணன் ஆசைத்தம்பி,

கேபிள் அலெக்ஸ்,

ராமலிங்கம், பரத்குமார்,காஜா பேட்டை சரவணன்,ஆவின் குணா,பொம்மாசி பாலமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.