எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க அல்லும் பகலும் அயராமல் உழைக்க வேண்டும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் .
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க அயராது பாடுபட வேண்டும்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது .
முன்னாள் அமைச்சர் நல்லுசாமி முன்னிலை வகித்தார்.முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், பகுதி செயலாளர்கள் அன்பழகன்,
எம்ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், கலிலுல் ரகுமான், ரோஜர் அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி பாலாஜி, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், பாசறை லோகநாதன், கலைப்பிரிவு ஜான் எட்வர்ட் குமார்,சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ், பேரவை துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், அம்மா பேரவை துணை செயலாளர் பொன்னர், கலை பிரிவு பொருளாளர் உரையூர் சாதிக் அலி, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ , வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், தில்லை விஷ்வா,
ஆண்டாள் தெரு சந்தோஷ் ராஜ்
வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், கௌசல்யா, ஜெயராமன், ரமணிலால் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது அவை வருமாறு:
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திட நமது மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் அல்லும் பகலும் அயராது உழைத்து பாடுபடுவோம் என்று உறுதி ஏற்கிறோம்.
பொய் வாக்குறுதி கொடுத்து, கடன் சுமையை ஏற்றிய திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
மே 12-ந் தேதி எடப்பாடி யாரின் பிறந்த நாளை கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.