தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வகையில் வாக்கு கிடைக்கவில்லை.
கமலஹாசனும் கடும் இழுபறிக்குப்பின் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தேர்தல் முடிந்த பின்னர் அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும். தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம்’’ எனத் தெரிவித்துள்ளார்.