Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரம்ஜானை முன்னிட்டு திருச்சி சமயபுரம் ஆட்டு சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை .

0

'- Advertisement -

ரமலான் பண்டிகைய முன்னிட்டு திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.

 

Ad banner

சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும் நிலையில் மாா்ச் 31 ஆம் தேதி கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம், நாமக்கல், தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமாா் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா்.

 

அதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் ஆடுகளை வாங்க வந்தனா்.

 

இதையடுத்து ஒரு ஆடு ரூ. 5000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலைபோன நிலையில் மொத்தம் ரூ. 2 கோடிக்கு மேல் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.