Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் 4 நாட்களாக குறைந்து வந்த கொரோனா இன்று புதிய உச்சத்தை தொட்டது.

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,34,804 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 397 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 25,368 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,52,283 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,63,390 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 6,073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று புதியதாக 1375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இன்று தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.