ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்தின்படி ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டி.ஆர். பாலு கடிதத்தை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்ததாக திமுக தெரிவித்துள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் ஏழு பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். உச்சநீதிமன்றம் கொரோனா தொற்று காரணமாக ஜெயில் கைதிகளை விடுதலை செய்ய கூறியிருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.