Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி “தி ஐ ஃபவுண்டேஷன்” கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

0

'- Advertisement -

திருச்சி தி ஐ ஃபவுண்டேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி.

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருச்சி “தி ஐ ஃபவுண்டேஷன்” கண் மருத்துவமனை சார்பாக, இன்று வெள்ளிக்கிழமை (14.03.2025) காலை கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இந்த விழிப்புணர்வு பேரணி மருத்துவர் டாக்டர்.அர்ச்சனா தெரசா தலைமையில், திருச்சி போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் முஹம்மது ரஃபி வாழ்த்துரை வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

மருத்துவமனை மேலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்று பேசினார்.

மருத்துவர்கள் டாக்டர் கிருஷ்ணன் ,டாக்டர் ரிப்க்கி காமில், K.ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள், புனித அன்னாள் செவிலியர் கல்லூரி மாணவிகள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் கண் நீர் அழுத்த நோய் தலைமை மருத்துவர் அர்ச்சனா தெரசா அவர்கள் கூறியதாவது, நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும், ஸ்டெராய்டு மருந்துகள் உட்கொள்பவர்களும் ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயம் கண் நீர் அழுத்த பரிசோதனை செய்து கொள்வதின் அவசியத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார்கள்,

 

மாணவர்களும் ஊழியர்களும், தங்கள் கரங்களில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.