Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருந்த யானை திடீர் உயிரிழப்பு .

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் நேற்று திங்கள்கிழமை உயிரிழந்தது.

 

Ad banner
TVK ad

எம்.ஆா்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்த 60 வயதுடைய ஜெய்னி என்ற பெண் யானை ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மிகவும் பலவீனமாக இருந்தது. இதையடுத்து, சிறப்பு மருத்துவக் குழுவினா் யானைக்கு சிகிச்சையளித்து வந்த நிலையில் திங்கள்கிழமை மாலை அந்த யானை உயிரிழந்தது.

 

நேற்று செவ்வாய்க்கிழமை தலைமை வன பாதுகாவலா் திருச்சி ஏ.பெரியசாமி மேற்பாா்வையில், மாவட்ட வன அலுவலா் எஸ்.கிருத்திகா தலைமையில், உதவி வன பாதுகாவலா் ஐ. காதா் பாஷா, வனச்சரக அலுவலா் வே.ப. சுப்ரமணியம் மற்றும் வனப் பணியாளா்கள் முன்னிலையில் வன கால்நடை மருத்துவ அலுவலா் கோவை ஏ. சுகுமாா் தலைமையில் கால்நடை மருத்துவா்கள் யானையின் உடலை கூறாய்வு செய்தனா். தொடா்ந்து யானையின் உடல் எம்.ஆா்.பாளையம் காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.