திருச்சி தேமுதிக தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு. தெற்கு மாவட்ட செயலாளர் சன்னாசிப்பட்டி பாரதிதாசனை சந்தித்து வாழ்த்து.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொழிற்சங்க
புதிய நிர்வாகிகள்
பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர்
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையில் இணைக்கப்பட்ட திருச்சி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் இன்று முதல் செயல்படுவார்கள் என அறிவிக்கப்படுகிறது. இவர்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு தொழிற்சங்க
புதிய நிர்வாகிகள்
செயலாளர்
எம்.பாலசுப்பிரமணி (எ) முத்து
தலைவர்
ஏ.கலைவாணன்
பொருளாளர்
ஏ.அர்ச்சுனன்
துணை தலைவர்கள்
வினோத், எஸ்.மோகன், எம்.கார்த்திகேயன்
துணை செயலாளர்கள்
எஸ்.அருண்குமார், எம்.ஐயப்பா,
எஸ்.தங்கபாண்டி ஆகியோர் சேமிக்கப்பட்டுள்ளனர்.புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் அனைவரும் திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆர்.பாரதிதாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.