நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அழைப்பு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
முன்னால் முதலமைச்சர்
அம்மா அவர்களின் *77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை மற்றும் திருவெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, நாளை திங்கட்கிழமை 24.2.2025 அன்று காலை 9 மணி அளவில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளார்கள்.
இதேபோல், முன்னாள் மேயர், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான்
கழக அமைப்புச் செயலாளர் விடங்கர்,
கழக மாணவர் அணி செயலாளர் நல்லதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றவிருக்கும்,
அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நாளை திங்கட்கிழமை (24.2.2025) மாலை 5 மணி அளவில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடைபெற உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில்,
மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் , ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
என தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .