அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட மகளிர் அணியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்
ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மகளிர் அணி செயலாளர்கள் ஆகியோர்களுக்கான மாவட்ட ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் நிர்வாகிகள் சூப்பர் நடேசன், எஸ்.கே.டி. கார்த்தி, ராவணன் , பாலசுப்பிரமணியன் , பாஸ்கர் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.