Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிருடன் இருக்கும் போதே அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய திமுக அமைச்சர் .

0

'- Advertisement -

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் போது நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
அதாவது திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாசர் சில சர்ச்சைகளில் சிக்கினார்.

அதாவது பொதுக்கூட்டத்தில் கல்லறிதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியதால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் நாசர் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக இறந்தவர்களுக்கு தான் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செய்வார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் உயிரோடு இருக்கும்போதே அமைச்சர் நாசர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும் இது வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த திமுக தொண்டர்களே அவர் எங்கள் தலைவர் , தமிழக முதல்வர் இப்படி எல்லாம் இந்த தற்கொலைகள் செய்வதை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். 

ஆனால் இந்த வீடியோ எந்த நிகழ்ச்சியில், எப்பொழுது எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.