ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சுனில்குமார் (வயது 48) என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக சுனில்குமாரின் மனைவி, கணவரிடம் கோபித்துக் கொண்டு கர்நாடகாவில் உள்ள தாய் வீட்டிற்கு சமீபத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மனைவியை பிரிந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் , மேலும் பணிச்சுமையாலும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது இளையமகனுடன் சுனில்குமார் வீட்டில் படுத்து தூங்கினாராம்.
நேற்று முன்தினம் அதிகாலை அவரது மகன் தூங்கிஎழுந்து பார்த்த போது தனது தந்தை தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இன்ஸ்பெக்டரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.