திருச்சி வந்த முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிரம்மாண்ட வரவேற்பு.
அமைச்சர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு மற்றும் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.
திருச்சிக்கு வந்தடைந்த அவருக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு,திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பெரியகருப்பன், மெய்யநாதன்,
மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன்,மாநகர செயலாளரும்,திருச்சி மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மதிவாணன், மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, மக்களவை உறுப்பினர் துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், ஆணையர் சரவணன், திருச்சி காவல் ஆணையர் காமினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில்,
திருச்சி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம்,மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், கமால் முஸ்தபா, காஜாமலை விஜய், ராம்குமார்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஆண்டாள் ராம்குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,வர்த்தகர் அணி தொழில் அதிபர் ஜான்சன் குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,
மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் புத்தூர் தர்மராஜ்,நிர்வாகிகள் அயூப்கான்,புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ் தனசேகர்,கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்ரமணியன்,வட்டச் செயலாளர் பி.ஆர்.பாலசுப்பிரமணியன், வட்டப்பிரதிநிதி பந்தல் ராமு,மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் கே.என்.சேகரன் வண்ணை அரங்கநாதன், சபியுல்லா செங்குட்டுவன், வீலா வேலு, மூக்கன்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா,
,பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி விஜயகுமார், கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், சிவக்குமார் நீலமேகம், மணிவேல், பாபு மோகன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.கே.கே.கார்த்திக், வேங்கூர் தனசேகரன்,கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, சீதாலட்சுமி முருகானந்தம், எல்ஐசி சங்கர்,மற்றும்
திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சியில் இருந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் சிவகங்கை புறப்பட்டார்.