திருச்சியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது.
திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு
வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக திருவெறும்பூர், துவாக்குடி, மற்றும் அரியமங்கலம் அம்மாக்குளம், வடக்கு உக்கடை, தெற்கு உக்கடை, பால் பண்ணை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரியமங்கலம் கல்லாங்குத்து தேவி மார்ட் காம்பவுண்ட் அருகே உள்ள காலி இடத்தின் ஓரமாக நம்பர் பிளேட் இல்லாத டூவிலரில் இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே அடுக்கி வைத்திருந்த மூட்டைகளையும் சோதனை.செய்தனர். அதில் 26 மூட்டைகளில் சுமார் 1050 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கைதானவர் தெற்கு தாராநல்லூர் சூரன் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ( வயது 35 ) மேலும் திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் காட்டூர் பாப்பா குறிச்சி திருவரம்பூர் துவாக்குடி பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காகவும், மாட்டு தீவனத்திற்காகவும் கடத்தி வந்து விற்பனைக்காக மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. இவர் அப்பகுதியில் தொடர் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது .
மேலும் இவர் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஓர் டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.