செல்போனையே நோண்டிக்கொண்டிருக்காதே என கணவன் கண்டித்ததால் ஒன்றரை வயது மகனின் கழுத்தை கொடூரமாக அறுத்துக்கொன்ற தாய் .
அளவுக்கு அதிகமான உடல்நிலை பாதிப்பால், தனக்கு பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று இளம்தாய் கடிதம் எழுதி வைத்து, குழந்தைகளின் கழுத்தை அறுத்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுததி வருகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா இவரது கணவர் பெயர் ராம்குமார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது.. இந்த தம்பதிக்கு 4 வயதில் லக்ஷ்மன்குமார், ஒன்றரை வயதில் புனித்குமார் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தம்பதி இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.. இதனால், ஒருகட்டத்தில் தன்னுடைய கணவரை விட்டு திவ்யா பிரிந்து சென்றுவிட்டார்.. தற்போது கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு, குழந்தைகளையும் அழைத்துச் சென்று அங்கேயே வாழ ஆரம்பித்தார்.
இந்நிலையில் கடந்த 21ம்தேதி, வீட்டை உள்புறமாக பூட்டிவிட்டு, தன்னுடைய ஒன்றரை வயது புனித்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார் திவ்யா.. பிறகு மூத்த மகன் லக்ஷ்மன்குமாரின் கழுத்தையும் அறுத்து கொன்றார், இறுதியாக தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதற்குள் இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது ஒன்றரை வயது புனித்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அலறியிருக்கிறார்கள். பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லக்ஷ்மன்குமார் மற்றும் திவ்யா, இருவரையும் மீட்டு உடனடியாக அருகில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் தந்தனர்.
போலீசார் விரைந்து வந்து, ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக திவ்யாவுக்கும், மூத்த மகனுக்கும் சிகிச்சை ஆரம்பமானது. பிறகு இது தொடர்பான விசாரணையை போலீசார் துவங்கினர்..
பெருங்கொளத்துாரைச் சேர்ந்தவர் ராம்குமார்(வயது 34). கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம்.. எனினும் இவரது ஊதியம் குடும்பத்துக்கு போதாமல் இருந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாகவே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
அதேநேரம் திவ்யா அடிக்கடி ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவிலும் அதிக நேரம் கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. செல்போனை அதிக நேரம் நோண்டிக் கொண்டு இருக்காதே , குழந்தைகளை கவனி என கணவன் கூறியுள்ளார். இதனாலும் தம்பதி இடையே தகராறு அதிகரித்துள்ளது. அதற்கு பிறகுதான், கணவனுடன் கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் திவ்யா,
இதற்கு பிறகு, ராம்குமார் தனது மனைவியை சமாதானம் செய்து, குடும்ப நடத்த பலமுறை செல்போனில் அழைத்தாராம். ஆனால் இனி குடும்ப நடத்த வரமுடியாது என்று திவ்யா பிடிவாதமாக சொல்லிவிட்டாராம். இதனால் கோபப்பட்ட ராம்குமார், திவ்யாவின் நடத்தை குறித்து தவறாக பேசிவிட்டு, செல்போன் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
ராம்குமார் சொன்னதை கேட்டு கடும் மனஉளைச்சலுக்கு ஆளான திவ்யா, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், கிச்சனுக்கு சென்று, கத்தியை எடுத்து வந்து, கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தைகளின் கழுத்தை அறுத்துள்ளார்..
ஒன்றரை வயது புனித்குமாரை, வீட்டின் பாத்ரூமுக்குள் தரதரவென இழுத்து சென்று, கழுத்தை கொடூரமாக அறுத்து துடிக்க துடிக்க கொன்றார். பிறகு, மூத்த மகன் லக்சன் குமாரையும் வீட்டின் பெட்ரூமுக்குள் இழுத்து சென்று, அதே கத்தியால் அறுத்துள்ளார்.. இதனால் வலி தாங்க முடியாமல் லக்சன் குமார் அலறி துடித்துள்ளார்.. அந்த சத்தம் கேட்டுதான் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்துள்ளார்கள்.
இதனால் ஓடிவந்த கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. சில நிமிடம் கழித்து கழுத்தில் ரத்தம் வழிந்தபடி, திவ்யாவே கதவை வந்து திறந்துள்ளார்.. பிறகுதான் உள்ளே சென்றுபார்த்தபோது 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை கண்டனர். இதில், லக்சன் குமார் மட்டும் கழுத்தில் ரத்த காயத்துடன் அழுதுக் கொண்டிருந்தானாம். இப்போதைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தாயும், மகனும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. ஆனால், திவ்யா கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, திவ்யா வீட்டில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், “என்னுடைய குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுவதால், எனக்கு பிறகு என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று கடிதத்தில் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்