Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

0

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள இயேசுவின் நற்செய்தி சபைக்கு வழக்கமாக செல்வது உண்டு.

இந்நிலையில், அந்த சபையின் பாதிரியார் ஜான்ராபர்டின் மகன் பாஸ்டர் டோனிராய்ஸ், இவருடன் நன்கு பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த பாஸ்டர் டோனிராய்ஸ், நந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கடந்த 4 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, இப்போதாவது என்னை திருமணம் செய்து கொள் என்று கூறி நந்தினி பாஸ்டர் டோனிராய்ஸை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி ஜெயபாரத் ஹவுசிங் போர்டிலுள்ள டோனிராய்ஸ் வீட்டுக்கு சென்ற போது, அவரது பெற்றோர் இனி எனது மகனை தேடி வரக்கூடாது, சர்ச்சுக்கும் போகக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து நந்தினி கூறும்போது, ” மனைவி என்ற பெயரில் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று என்னை டோனிராய்ஸ் சீரழித்தார். மேலும், அவரது தேவைக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கி செலவு செய்தேன்.

டோனிராய்ஸ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்து, எனக்கு எதிராக செயல்பட்டனர்” என்றார்.

இதையடுத்து, டோனிராய்ஸ் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நந்தினி தனது வழக்கறிஞர் சுந்தர் என்பவருடன் மாநகர காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.