சொத்து வரி கட்டிட அனுமதி வரி அனைத்தும் செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நடவடிக்கை எடுப்பாரா ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி. வழக்கறிஞர் கிஷோர் குமார்.
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரின் மேலான பார்வைக்கு
ஸ்ரீரங்கம் தாலுகா, கம்பரசம்பேட்டை, கணேஷ் நகர், பாலாஜி அவென்யூவில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த நாட்களாக பெய்யும் மழையினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் சார்.
வாக்களித்த மக்களின் அவலநிலையை_சரிசெய்ய மக்கள்நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
இதில் கொடுமை இங்கு குடியிருக்கும் மக்கள் சொத்து வரி, கட்டிட அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு செலுத்துகிறார்கள். ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை, குறிப்பாக சாலை வசதி என்பது அறவே இல்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் என கிஷோர் குமார் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார் .