Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

0

'- Advertisement -

 

திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சேவா சங்க பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நேற்று நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவர் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு(பொது மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில் ) தேர்வில் முதல்
மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பத்தக்கம் மற்றும் ரூ 500/- பணமும், இரண்டாம் இடத்தை பிடித்த மாணவிகளுக்கு வெள்ளிப்பதக்கமும் ரூ 500/- பணமும் வழங்கப்பட்டனார்

Suresh

மேலும் அனைத்து பாடப்பிரிவுகளில் முதல் மற்றும் இரண்டாம் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களும் வழங்கினார்.

பள்ளி செயலாளர் சரஸ்வதி வரவேற்பு ஆற்றினார். பள்ளியின் ஆண்டறிக்கை தலைமையாசிரியர் நாகம்மை வாசித்தார்.

விழாவில் கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும்
பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முடிவில் செயலாளர் நன்றி கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.