திருச்சியில்
வெளி மாநில லாட்டரி
விற்ற 3 பேர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில்
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (வயது 64) என்பவரை கைது செய்தார் .
தில்லைநகர் போலீசார் ஆழ்வார் தோப்பு பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளுடன் தென்னூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சாமத் (62 ) என்பவரையும் ,
உறையூர் போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக திருச்சி புத்தூர் வடக்கு எடத்தெரு பகுதியைச் சேர்ந்த அருணகிரி (53)என்பவரையும் கைது செய்து உள்ளனர்.