Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.

0

திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன்
6 பேர் சிக்கினர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகாமையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜி நகர் மில் காலனி 6 -வது தெரு பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றினர். திருவரங்கம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழைய கொள்ளிடம் பாலம் அழகிரிபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அழகிரிபுரம் புதிய கொள்ளிடம் சோதனை சாவடி பகுதியைச் சேர்ந்த பாலா என்கிற தனபால் ( 26 ) என்பவரை கைது செய்தார்.

இதேபோன்று பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கெம்ஸ் டவுன் புதிய ரயில்வே ட்ராக் பகுதியில் கஞ்சா விற்ற பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியை சேர்ந்த கௌரிஸ் என்கிற நவநீத கிருஷ்ணன் ( 27 ) என்பவர் சிக்கினார்.

மேலும் தில்லை நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பீர்முகமது ( 28 ) என்பவரை கைது செய்தார். மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முருகன் ( 58 )என்பவரை கைது செய்தார்.

இதேபோன்று மதுவிலக்கு பிரிவு சிறப்பு ஞானசேகர் திருச்சி கருமண்டபம் கோரையாறு கரை பகுதிகளில் கஞ்சா விற்ற சந்தோஷ் (40) என்பவரை கைது செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.