Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக மாநாடுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த திருச்சி சீனிவாசன் உள்ளிட்ட தொண்டர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் . திருச்சி மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வேண்டுகோள் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

TVK ad

திருச்சி சேர்ந்த அன்பு தம்பி வழக்கறிஞர் V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட இருவர் குடும்பத்தினருக்கு த.வெ.க தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்சி மாவட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வழக்கறிஞர் V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட இருவர் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு செல்லும் வழியில் 27.10.2024ந் தேதி காலை உளுந்தூர்பேட்டை அருகில் விபத்தில் மரணமடைந்தாளர் என்ற செய்தி தமிழக வெற்றி கழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் எங்களை போன்ற கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

தம்பியை பொருத்தமட்டில் திருச்சி மாவட்டத்தில் V.L.ஸ்ரீநிவாசனின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குறியது.

எனவே விக்கிரவாண்டி மாநாட்டிற்கு வரும் வழியில் உயிரிழந்த V.L.ஸ்ரீநிவாசன் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை வலியுறுத்திகேட்டு கொள்கிறோம் என கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.