மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்த அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்
மதுக்கடைகள் மூடக்கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
மக்கள் எதிர்ப்பையும் மீறி லிங்க நகர் மற்றும் வயலூர் சாலை சீனிவாசா நகரில் புதிதாக மது கடைகள் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி கடந்த 09/09/24 அன்று, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவுறுத்தலின்படி, லிங்க நகர் மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம் தொடர்பான திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதனின் அனுமதி கோரும் கடிதத்தை, உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள்
தருண், தண்டபாணி, மாரிமுத்து, டிங்கர் ரமேஷ், வெங்கடேஷ், சந்திரசேகர், கலைமணி பாபு, லோகநாதன், கைலாஷ் ராகவேந்திர ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் வழங்கினார்கள்.
உண்ணாவிரதத்திற்க்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளார்கள்.