Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

50க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்த கில்லாடி பெண்.

0

திருப்பூர் சத்யா வழக்கில் இன்று பரபரப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.. அத்துடன் சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.

கொடிமுடியை சேர்ந்த 30 வயது இளம் பெண் சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, மேட்ரிமோனியலில், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடி செய்து வந்துள்ளார்.

அந்தவகையில், தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர் மூலம் சத்யாவின் குட்டு அம்பலமானது. அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 55 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோல, மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்தித்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருப்பாராம் சத்யா. இதை ரகசியமாக வீடியோ எடுத்து, பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டுவாராம். எனவே, சத்யாவின் செல்போனை போலீசார் ஆராய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்
தான், சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி தற்போது போலீசில் கைதாகி உள்ளார். இவர் சத்யாவுக்கு புரோக்கராகவும் செயல்பட்டு வந்துள்ளார் . எனவே இவரை பிடித்து விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும் என்பதால், மிக தீவிரமான வேட்டைக்கு பிறகு தாராபுரம் மகளிர் போலீசார் தமிழ்ச்செல்வியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பல்வேறு திடுக் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். “தமிழ்செல்வியின் கணவர் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், வேறொருவருடன் தமிழ்ச்செல்வி வசித்து வருகிறார்.

கடந்த 2021-லிருந்தே சத்யாவுடன் தமிழ்ச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்து பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.. பெண் பார்ப்பவர்களிடம் அணுகி, தன்னை புரோக்கர் என்று அறிமுகப்படுத்தி கொள்வாராம் தமிழ்ச்செல்வி உடனே சத்யாவின் படத்தை காட்டி, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வாராம்.

முக்கியமாக குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து சத்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் தமிழ்ச்செல்வி. இதற்காக புரோக்கர் கமிஷனையும் மாப்பிள்ளை வீட்டில் வாங்கி கொள்வாராம். சத்யாவுக்கு அம்மா, அப்பா, சில சொந்தக்காரர் என் அனைவரையும் வாடகைக்கு நியமித்துவிடுவார்கள்.

பார்ப்பதற்கு வசதி குறைவாக இருக்கும்படியான அம்மா, அப்பாக்களை தேர்ந்தெடுப்பார்கள். பிறகு மாப்பிள்ளை வீட்டாரிடம், சத்யா வீட்டில் வசதி குறைவு அதனால், நீங்களே நகை போட்டு இந்த கல்யாணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்ச்செல்வி பேசுவாராம். பல காலம் பெண் கிடைக்காமல் தவித்து கிடக்கும் மாப்பிள்ளை வீட்டினரும், இதற்கு சம்மதம் சொல்லி, சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து கல்யாணம் செய்து கொண்டு போவார்களாம்.

சரியாக 1 வாரம் மட்டும் மட்டும்தான், அந்த மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்துவாராம் சத்யா. மாப்பிள்ளை ஏமாளி என்றால், 2 நாட்களே சத்யாவுக்கு போதுமாம். ஒரு வாரம் குடும்பம் நடத்தி விட்டு, நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, இன்னொரு ஊருக்கு சென்றுவிடுவாராம். இப்படி 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியிருக்கிறாராம் சத்யா.

இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தி வந்துள்ளார். இதுபோல 30-க்கும் மேற்பட்டோருடன் தனிமையில் உல்லாசமாக சத்யா இருந்துள்ளதாகவும், இதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் சில முக்கிய பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.

இதுவரை 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கையை இந்த 2 பெண்களும் வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போது சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி உள்ளார்கள்.
திருமணத்திற்காக ஒவ்வொரு மாப்பிள்ளை வீட்டிலும் போடும் நகைகள், தமிழ்ச்செல்வி பெயரில் பேங்க் லாக்கரில் இருக்கிறதாம். இவ்வளவும் தமிழ்ச்செல்வியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, போலீசார் தொடர்ந்து தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே, முக்கிய பிரபலங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அப்பாவி நபர்கள் என லிஸ்ட் நீள்வதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல சத்யாவின் செல்போனை ஆய்வு செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

அந்தவகையில், போலீசார் இந்த மோசடி விவாகரத்தில் முனைப்பு காட்டி, விசாரணையை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்று தந்து, அவர்களின் பணம், நகைகளை மீண்டும் ஒப்படைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.