திருச்சியில் பள்ளி மாணவி உயிர் இழப்பு . அமேசானில் வாங்கி சாப்பிட்ட சைனீஸ் நூடுல்ஸ் 800 கிலோ திருச்சியில் பறிமுதல்
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் ஜான் ஜூடு. ரயில்வே ஊழியா். இவரது மகளும், 16 வயது மகள் ஸ்டெபி ஜாக்லின் தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா்.
சனிக்கிழமை இரவு உணவுக்குப் பின்னா் உறங்கச்சென்ற சிறுமி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான நேரத்துக்கு எழவில்லை. பெற்றோா் அவரை எழுப்பியபோது, சிறுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பெற்றோா் மற்றும் உறவினா்களுடன் தகவலைப் போலீஸாருக்கு தெரிவிக்காமல் உடலை பிரதேப் பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து, சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவசர கதியில் உடலை அடக்கம் செய்ய முயல்வதாகவும் தகவலறிந்த அரியமங்கலம் போலீஸாா் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, சிறுமியின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி நூடுல்ஸ் உணவை விரும்பி உட்கொள்வாராம். அண்மையில் அமேசான் மூலம் நூடுல்ஸ் பொட்டலங்களை ஆா்டா் செய்து வாங்கியுள்ளாா். அவ்வாறு வாங்கி வைத்திருந்த நூடுல்ஸ் பொட்டலங்களில் சிலவற்றை சனிக்கிழமை இரவு சமைத்து உட்கொண்டுள்ளாா். எனவே அதன் காரணமாக அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது,
அண்மையில் திருச்சி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் திருச்சியில் உள்ள ஒரு வணிக வியாபாரி உடனில் உள்ள சைனீஸ் நூடுல்ஸ் சோதனைக்கு உட்பட்டதில் அது கெட்டுப்போனவை என்பதை அறிந்து சுமார் 800 கிலோ நூடுல்ஸ் வாக்கெடுகள் பறிமுதல் செய்யப்பட்டது .
அமேசான் போன்ற ஆன்லைனில் சைனீஸ் உணவு வகைகளை வாங்கி சாப்பிடாமல் தங்களது உடல் நலத்தினை காக்க வேண்டும் என சுகாதார அலுவலர்கள் கூறியுள்ளனர் .