திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர் மற்றும் எம்.பி யை அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக பகுதி செயலாளருக்கு நள்ளிரவு ஜாமின்
திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக எம்.பி. கனிமொழி திருச்சி அமைச்சர் கே.என். நேருவையும் அவதூறாக பேசியதாக வழக்கில் நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். மதியம் கோர்ட்டு அழைத்துச் சென்று மாலை 7 மணி அளவில் திரும்பி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு முறைப்படி கையெழுத்து எல்லாம் பெற்றுக் கொண்டு மீண்டும் திருச்சி மகிளா கோர்ட் அழைத்து செல்கையில் சுரேஷ் குப்தாவிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆனாலும் போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றி கோர்ட் அழைத்துச் சென்றனர்.
நேற்று மதியம் முதல் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், வனிதா, சசிகுமார், ஜெயராமன், முத்துமாரி, தினேஷ் பாபு , நசுருதீன் மற்றும் பல வழக்கறிஞர்கள் இரவு 11 மணி வரை சட்டப் போராட்டம் நடத்தி, திறம்பட வாதிட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.
முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், டிபன் கடை கார்த்திகேயன் , வசந்தம் செல்வமணி, வெங்கடேஷ், விக்னேஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு வரை கோர்ட் வளாகத்தில் திரண்டு இருந்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.