திருச்சி மாநகரின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

திருச்சி துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி.
சாலை, மாவட்ட ஆட்சியரக சாலைப் பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வென்ட் சாலை, பறவைகள் சாலை, பாரதியாா் சாலை, மேலப்புதூா், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, தலைமை தபால் நிலையப் பகுதி, முதலியாா்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூா் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜாபஜாா், பாண்டமங்கலம், வயலூா் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகா், சின்டிகேட் வங்கிக் காலனி, பேங்கா்ஸ் காலனி, சீனிவாச நகா், ராமலிங்க நகா், தெற்கு வடக்கு கீதா நகா், அம்மையப்ப பிள்ளை நகா், எம்.எம். நகா், சண்முகா நகா், ரெங்கா நகா், உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகா், சோழங்கநல்லூா், உறையூா் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகா், குழுமணிச் சாலை, நாச்சியாா்கோவில், பொன்னகா், கருமண்டபம் இருபுறமும், செல்வ நகா், ஆா்எம்எஸ். காலனி, தீரன் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா் ஆகிய பகுதிகள்.
மெயின்காா்டுகேட் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் சஞ்சீவி நகா், கீழதேவதானம், மேலதேவதானம், டவுன் ஸ்டேஷன், ஈ.பி. சாலை, எஸ்ஆா்சி சாலை, பட்டா்வொத் சாலை, ராஜீவ்காந்தி நகா், எம்ஆா்வி நகா் ஆகிய பகுதிகள், இதேபோல மன்னாா்புரம், எடமலைப்பட்டிபுதூா் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சிஹெச் காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகா், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோா்ஸ் சாலை, கேசவ நகா், காஜா நகா், ஜே.கே. நகா், ஆா்விஎஸ் நகா், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம், இபி காலனி, காஜாமலை, தா்கா சாலை, ஆட்சியா் இல்லம், மன்னாா்புரம் பகுதிகள்,
இதேபோல, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை முகாம், எடமலைப்பட்டி, கிராப்பட்டி காலனி, அன்புநகா், அருணாசல நகா், காந்திநகா், பாரதி மின்நகா், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் வங்கிக் காலனி, கொல்லாங்குலம், எடமலைப்பட்டிபுதூா், சொக்கலிங்கபுரம், ராமச்சந்திரா நகா், ஆா்எம்எஸ் காலனி, கே.ஆா்.எஸ். நகா், ராஜீவ்காந்தி நகா், கிருஷ்ணாபுரம், செட்டியப்பட்டி, பஞ்சப்பூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.