திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருச்சி பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இறை வணக்கத்துடன் தொடங்கியது.
ஆசிரியை காயத்ரி அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் எட்வின் பால்ராஜ் தலைமை ஏற்க பொன்மலைப்பட்டி, டோர்ஸ் காது கேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி மேரி சில்வியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் மாணவ-மாணவிகளின் நடனம், காமராஜர் பற்றிய கவிதை, காமராஜர் குறித்த வாழ்க்கை வரலாறு பற்றி ஆங்கிலம் மற்றும் தமிழில் மாணவ-மாணவிகள் பேசினார்கள்.
ஆசிரியை லதா விழாவினை தொகுத்து வழங்க ஆசிரியை கலைச்செல்வி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
விழாவில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது