Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மன் தனியார் பேருந்து நிற்காது எனக் கூறும் நடத்துனர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ‘

0

 

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

26-6-2024 அன்று காலை சுமார் 8.40 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் TN.81 F9265 என்ற எண்ணுள்ள அம்மன் டவுன் பஸ்ஸில் ஏறி காட்டூருக்கு டிக்கட் கேட்டேன். பஸ்மீன் மார்க்கட் ஸ்டாப்புக்கு வந்தபோது நடத்துனர் ரைஸ்மில்,

ரயில் நகர் ஸ்டாப்பில் பஸ் நிற்காது என கூறி ஏறவந்த பயணிகளை இறக்கிவிட்டார்.

அவரிடம் ஏன் ரைஸ் மில், ரயில் நகரில் பஸ் நிற்காது என நான் கேட்டதற்க்கு என் இஷ்டம் நீ ஏறாதே இறங்கு என்றார். நான் காட்டூர் போகிறேன் என கூறினேன். கண்டக்டர் நேம் பேஜ் அணியவில்லை. அவர் பெயர் என்ன என்று விசாரிக்க ஏற்கனவே அம்மன் பஸ்ஸில் டிரைவராக பணியாற்றிய இக்பாலிடம் போன் செய்து கேட்டதற்க்கு அவன் பெயர் விஜி அவன் எப்போதும் ரைஸ்மில், ரயில் நகரில் நிறுத்துவதில்லை எனக் கூறினார். எனவே பயணிகளின் உரிமைகளுக்கு விரோதமாக செயல்படும் அம்மன் பஸ் உரிமையாளர், மற்றும் நடத்துனர் விஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டுகிறேன்.

மேலும் ரைஸ்மில் இரயில் நகரில் பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிப்பதால் வேண்டுமென்றே நிற்காமல் செல்வதாக அறிகிறேன். மேலும் ஏன் ரைஸ்மில், ரயில் நகர் ஸ்டாப்பில் பஸ் நிற்காது என கேட்டால் மிரட்டும் தொனியில் குரலை உயர்த்தி பேசும் கண்டக்டர் விஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

என முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தனது அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.