Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி காந்தி மார்க்கெட்டில்
போதைப்பொருள்களுடன் பெண் உள்பட 4 பேர் கைது.

TVK ad

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜெயில் பேட்டை பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு டீக்கடை அருகில் பெண் உள்பட 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கான்ஸ், விமல், வி ஒன் புகையிலை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இவை 15 கிலோ அதன் எடையுள்ள ரூ50ஆயிரம் மதிப்புள்ளது என தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் ஜெயில் பேட்டையை சேர்ந்த சகாயராஜ், சந்திரமோகன் மனைவி ரேவதி, உறையூரை சேர்ந்த மாரிமுத்து, வரகனேரியை சேர்ந்த பதேஷ் குமார் என்பது தெரியவந்தது.

இதே போல் உறையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சதீஷ் என்ற வாலிபரை இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.