திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகதின் வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார்.
திருவனை கோவில் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தேமுதிக தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பாரதிதாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் இளையராஜா இருவருடன் சென்று தேர்தல் அலுவலர் மகேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக அம்மா மண்டபம் அருகில் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அலுவலகம் மாநில பொருளாளர் முன்னாள் தலைமை கொறடா ஆர்.மனோகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
மதியம் 2 மணி அளவில் திருச்சி மேற்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணி சார்பாக போட்டியிடும் SDPI கட்சி சார்பில் ஹஸ்ஸன் இமாம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், தேமுதிக திருச்சி மாவட்ட தலைவர் ஆகியோர் உடன் சென்றனர்.