வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற வெள்ளிக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து
ஸ்ரீரங்கம் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் நேற்று (திங்கள் அன்று) திருவரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நடைமுறை.
ஆனால் திருவானைக் கோவில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்பட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரை சுற்றி நின்றதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் ம் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 12ம் தேதி கோவில்பட்டி கடம்பூர் ராஜீ நிர்வாகிகளுடன் காரில் சென்றபோது பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து , SI முருகன் உள்ளிட்ட பறக்கும் படையினர் காரை சோதனை செய்தனர், ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது முறையாக அதே அதிகாரிகள் சோதனை செய்ததால் கோபமடைந்த அமைச்சர் ராஜீ தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து அமைச்சர் ஒருமையில் பேசியதாக காவல்துறையில் புகார் அளித்தார். அவசரஅவசரமாக மாரிமுத்து விளாத்திகுளம் தொகுதி மாற்றப்பட்டார்.
புகாரின் பேரில் அமைச்சர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தற்கு IPC 353, மிரட்டல் விடுத்தற்க்கு 506/1 என இரண்டு பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி மாரிமுத்து மீண்டும் கோவில்பட்டி பகுதியில் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு கு.பா. கிருஷ்ணன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என பொதுமக்கள் எதிர்பார்ப்பு .