Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதியில் மனுத்தாக்கல்.

0

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரம். 6ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான மனுத் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.

திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் மனு தாக்கல் செய்தார்.

அவருடன் கூட்டணி கட்சியை டிவி கணேஷ், மற்றும் SDPI கட்சி மேற்கு வேட்பாளர் உடன் இருந்தனர்.

உறுதிமொழி எடுத்துக் கொண்ட மனோகரன் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் நான் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றால் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுன் .

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன் .

திருச்சியில் 5 ஆண்டுகாலம் இரண்டு அமைச்சர்கள் செய்யாத புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு திருச்சியில் சிலை அமைப்பேன் எனக் கூறினார்.

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்குள் நிருபர்கள் பேட்டி கேட்டபோது 200 அடி வெளியே சென்று விடலாம் எனக் கூறினார், அப்போது அருகில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இங்கேதான் பேட்டி கொடுத்தார் அதனால் நீங்களும் இங்கே பேட்டி கொடுக்கலாம் என அனுமதி அளித்த பின்பு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகளை மதித்த வேட்பாளர் மனோகரனுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.