கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சாட்டிங் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் தனியாக இருக்க விரும்பியுள்ளார்.இதனால், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் உள்ள புதர் அருகே வாலிபரை செல்போனில் வருமாறு கூறியுள்ளார்.
அதன்படி, இருவரும் உடலுறவு கொள்ள முயன்றபோது, புதரின் மறைவில் இருந்து மற்றொரு இளைஞர் வருவதைக் கண்டு ஐடி ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வந்த இளைஞரும் இவரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. அப்போது இருவரும் சேர்ந்து ஐடி ஊழியரை கடுமையாக தாக்கி பணம் கேட்டுள்ளனர். ஆனால், பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த இருவரும், துணிகளை கழற்றச் சொல்லி, செல்போனை எடுத்துச் சென்றனர்.
ஒரு வழியாக ஐடி ஊழியர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஐடி ஊழியர் திருமணம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற இருந்த நிலையில் ஆபாச செயலி மூலம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.