திருவரங்கத்தில் பரிதாபம் :
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு.
திருவரங்கம் மங்கம்மா நகர் விஸ்கரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நந்தினி (வயது 23).இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் திவ்யா ஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்லையில் சம்பவத்தன்று பூர்ணிமா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
.இது குறித்து ஹரிஹரனின் பாட்டி போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார் .இது குறித்த புகாரின் பேரில் திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.