2 கார் மோதியதில் அகப்பட்ட பெண் தான் உயிர் பிழைக்க காரணமாக இருந்த ப்ரண்ட்லைன் மருத்துவ குழுவிற்கு நன்றி தெரிவித்தார் .
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி.
இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டால் அவர் நசுங்கி, தலை காயம், பலமான மூளையில் அடிப்படுதல், நெஞ்சில் இரத்தக் கசிவு, வயிற்றில் கல்லீரல், மண்ணீரல் நசுங்கி இரத்தக் கசிவு, இரத்த குழாய்கள் சிதைந்து இரத்தப்போக்கு போன்ற காயங்கள் இறப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிலர் தெய்வாதீனமாக பிழைத்துக் கொள்ளலாம். அதுபோல் 40 வயது மதிக்கத்தக்க பெண் சாலை விபத்தில் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் மோதியதில் அடியில் அகப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் 09.03.2024 அன்று உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் செய்ததில், தலையில் காயமும், நெஞ்சு பகுதியில் இரண்டு புறமும் விலா எலும்புகள் முறிந்தும் வயிற்றில் கல்லீரல் பலமாக அடிபட்டு, இரத்தக்கசிவும் இருந்தது. உடனடியாக அவருக்கு வயிற்றில் அறுவை சிசிக்சை செய்தால் தான் நோயாளியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் ராதாகிருஷ்ணன், ஆனந்த், மற்றும் வசந்த் கொண்ட மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்தது. இரத்தக்கசிவு மிகவும் அதிகமாக இருந்ததாலும், வலது கல்லீரல் சிதைந்து இருந்ததாலும் பேக்கிங் சிஸ்டம் மூலம் இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு, நுரையீரல் பாதிப்பும் இரத்த தட்டணுக்கள் குறைவாக இருந்ததால் தேவையான செயற்கை சுவாசமும், இரத்த அணுக்களும் செலுத்தப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து மறு அறுவை சிகிச்சை செய்து பேக்கிங் சிஸ்டம் எடுக்கப்பட்டு முழுமையாக இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது. கல்லீரல் நல்ல நிலையில் இருந்ததால் Preservation Surgery செய்யப்பட்டது. தற்போது நோயாளி குணமாகி . வீடு திரும்பினார்.
இதன் சிறப்புகள்
1. அடிப்பட்ட விதம் பார்த்து நோயாளி பிழைக்க வாய்ப்பு மிகவும் குறைவு
2. பல உறுப்புகள் அடிப்பட்டு மூளை, முகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் பாதிப்பு
3. அதிக இரத்தக்கசிவு, இரத்த தேவை
4. கல்லீரல் தேவையான உறுப்பு எனவே preservation செய்ய வேண்டும்.
5. மருத்துவக் குழு
பொது அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.ராதாகிருஷ்ணன்
மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தண்டபாணி,
குமார், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் குமார் ,
இரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ஆனந்த் ,
முகம் மற்றும் பல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் சுப்பிரமணி ,
தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் வசந்த்.
தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஆனந்த் ,
நுரையீரல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் மதன் மோகன் ,
சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன்,
கணேஷ் சிறுநீரக சிகிச்சை மருத்துவர் அரவிந்த்
ஒவ்வொருவரும்
திறமையாக
செயல்பட்டு, இது போல் பல நோயாளிகள்
காப்பாற்றப்பட்டுள்ளனர். நோயாளிக்கு 30 Unit இரத்தம் தேவைப்பட்டது. அவரின் உறவினர்கள், நண்பர்கள் தேவையான நேரத்தில் தானம் கொடுத்தனர்.
சாலை விபத்தில் அடிப்பட்டு எங்கள் மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்பட்டால், எங்கள் மருத்துவக்குழுவின் மருத்துவர்கள் உடனடியாக கவனித்து மருத்துவமனையின்
Standard Protocol முறையில் வைத்தியம் பார்ப்பதால் நோயாளிகள் பயன்பெறுகிறார்கள்.
தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் முழுமையாக
செயல்படுவதால் எண்ணற்ற நமது பகுதி நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில்
வந்து உயிர் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த அந்த பெண்மணி ப்ரண்ட் லைன் மருத்துவ குழுவிற்கு தனது நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துச் சென்றார்.