Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

TVK ad

ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் வேட்பாளர்கள் ஒருவர் கூட நேற்று வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மட்டும் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சனி,ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.