Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்

0

திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை காண்போம்.

திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்,

* திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

* அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

* முதலமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டில் தனி தொகுதி உருவாக்கப்பட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்டிருக்கக்கூடிய மனுக்களுக்கு 100 நாட்களுக்குள்
தீர்வு

* அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்

* சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

* பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத்திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்

* சென்னையில் திராவிட இயக்க திடல் கோட்டம் அமைக்கப்படும்

* கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டுவரும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது

* கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும்

* ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்

* சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

* பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்

* மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்

* நியாயவிலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்

* உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்

* அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும்

* சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்

* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை கலைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்

* குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்படும்

* நகர்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிறுப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்

* கிராமநத்தத்தில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கப்படும்

* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்

* அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்

* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி செய்யப்படும்

* கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும்

* இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* மசூதி, தேவாலங்கயங்களை புனரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் முறையான பயிற்சிபெற்று 14 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருக்கும் 205 அட்சகர்களுக்கும்
உடனடி பணி நியமணம் செய்யப்படும்

* 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்

* ஏழைமக்கள் பசிதீர முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்

* நடைபாதைவாசிகள் தங்க இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்

* தமிழக ஆறுகள் மாசடையாமல் காக்க தமிழக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்

* இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்

* கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்

* ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும்

* பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் நலன்காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்

* சிறு,குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்

* ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்

* மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்

* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றப்படும்

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்

* புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

*தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும்

* வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்

* அரசு பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்

Leave A Reply

Your email address will not be published.