40வகையான மூலிகை தோட்ட வளர்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏராளமான மாணவிகள் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, காலநிலை மாற்றம், திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து மூலிகை வளர்ப்பது மற்றும் மருத்துவத்தின் அவசியம் வலியுறுத்தி மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர், மற்றும் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகயராஜ் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொய்கை பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் மணப்பாறை வேங்கைகுறிச்சி ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளிகளில் உட்பட மூன்று பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் மிருணாளினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார.
இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் மாவட்ட அலுவலர் மகேஸ்வரன், திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்ட வனச்சரக அலுவலர் மகேஸ்வரன், வட்டார கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட பசுமை தோழன் காட்வின், தலைமை ஆசிரியர்கள் காட்டூர் பாப்பா குறிச்சி பள்ளியை சேர்ந்த தேன்மொழி, ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி சேர்ந்த லதா, ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த அழகம்மாள்,
மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள்
கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மூலிகை தோட்டங்களை சீர்படுத்தி பயன்படுத்தும் வகையில் பூவாளியும், சொட்டுநீர் மற்றும் அதற்கான உபகரணங்கள், செடியை காப்பதற்கான வேலி அமைத்தல் குறித்ததான விழிப்புணர்வும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்நிகழ்வில் 40வகையான மூலிகை தாய் செடிகளும் வழங்கப்பட்டது.
40 வகையான மூலிகைச் செடிகளுக்கான மருத்துவ குணங்கள் குறித்ததான கைப்பிரதிகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.