எல்லாரும் கே.என்.நேரு ஆக முடியுமா? பஸ் ஓட்டி தொடங்கி வைக்கிறேன் என்று அசிங்கப்பட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி.
ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூரில் இன்று காலை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து , ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் . இத்துடன் அவர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்று இருக்கலாம்.
ஆனால் அமைச்சர் கே என் நேரு எப்போதும் புதிய வாகனங்கள் தொடக்க விழாக்களில் அவரே பஸ், பொக்லின் போன்ற கனரக வாகனங்களை சர்வ சாதாரணமாக இயக்கி அனைவரிடமும் பாராட்டுகளை பெறுவார்.
அதே மாதிரி நாம் இன்று நடந்த நிகழ்ச்சியில் பஸ்சை இயக்கி தொடங்கி வைக்கலாம் என முயற்சி செய்தார் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ . ஆனால் கியர் எது, பிரேக் எது எது என தெரியாமல் திடீர் திடீர் என பிரேக் அடித்து அருகில் இருந்தவர்களை அலறவிட்டார் .
இவர் தடவி தடவி பஸ் ஓட்டியைதை கண்ட அருகில் இருந்தவர்கள் எல்லாரும் நேரு போல் ஆக முடியுமா என கிண்டல் அடித்து சிரித்து
சென்றனர் .
எம்எல்ஏவுக்கு தேவையான அசிங்கம் ?