பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு வருவாய் துறையினர் கலெக்டர் வளாகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
திருச்சியில் பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டடு வருகின்றனர்.
பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை அடுத்து நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், ஆட்சியா் அலுவலகங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.