சமூக விரோதி திருமாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் ஹெச்.ராஜா
மனு தர்மத்தின்படி எல்லா பெண்களும் கடவுளால் பாலியல் தொழிலாளிகளாக உருவாக்கப்படுகிறார்கள் என்றும், சனாதன தர்மத்தின்படி ஆண்களை விட தாழ்ந்த அந்தஸ்தை பெண்கள் பெறுகிறார்கள் என்றும் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் திருமாவளவன் பேசிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனு தர்மத்தில் உள்ளவை என திருமாவளவன் பேசியதை எடிட் செய்து பெண்களுக்கு எதிராக அவர் பேசியது போன்று சிலர் பரப்பி வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டவர்கள் இதை பயன்படுத்தி திருமாவளவனையும், திமுக கூட்டணியையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் இன்று (அக்டோபர் 24) மாலை 3 மணியளவில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பொய்யை பரப்பும் வக்கிர புத்தி கும்பல்: குஷ்புவுக்கு திருமா பதிலடி!
தற்போது இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தனது சரக்கு மிடுக்கு பேச்சால் அனைத்து சமுதாய பெண்களை காமத்திற்கு அலைபவர்கள் என்றும் ஆண்கள் ஆண்மை அற்றவர்கள் என்று பேசிய தீயசக்தி திருமாவளவன் இந்து தர்மத்தில் பெண்களை விபச்சாரிகள் என்று கூறியுள்ளதாக பொய் பரப்பியுள்ளார்.இந்த சமூக விரோதியை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.