Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இல்லாத தடுப்புஊசி வைத்து வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். கமலஹாசன் காட்டம்.

இல்லாத தடுப்புஊசி வைத்து வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். கமலஹாசன் காட்டம்.

0

தடுப்பூசி என்பது அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல – கமல்ஹாசன் காட்டம்*

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பு மருந்து வழங்குவோம்’ என்று தெரிவித்தார். அவரது பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கிறார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டது.
அதேபோல தமிழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக அரசு தங்கள் செலவில் இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும்’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே… தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.
எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர்.இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்.
ஐயா ஆட்சியாளர்களே…
தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து.
அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல.
மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்’ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.