திருச்சியில் 25 முதல் 28 வரை கடை அடைப்பு. தீர்வு காணப்படுமா ?
திருச்சியில் 25 முதல் 28 வரை கடை அடைப்பு. தீர்வு காணப்படுமா ?
*திருச்சியில் 25 முதல் 28 வரை கடையடைப்பு ! – அதிர்ச்சியில் பொதுமக்கள் !*
கொரோனா பொதுமுடக்கம் தொடங்கம் காரணமாக திருச்சி காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, காந்தி மொத்த காய்கறி சந்தை தற்காலிகமாக பொன்மலை ஜி கார்னர் மைதானத்திலும், சில்லறை விற்பனை சந்தை மாநகரில் 10 இடங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்தி சந்தையும் செயல்பட அனுமதி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தற்காலிக சந்தையில் இடநெருக்கடி, மழையால் குளம்போல் தேங்கும் தண்ணீர், மக்கள் வரத்து போன்ற பல்வேறு குறைபாடு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காந்தி சந்தையை திறக்கக்கோரி காந்தி சந்தை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்தநிலையில் வியாபாரிகள் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்கக்கோரி வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
இந்த திடீர் கடையடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண கோரிக்கை எழுந்துள்ளது.