நாளை அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தேவரின் ஜெயந்தி விழா. பெருந்திரளாக கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு.
திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனாரின் 116.வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு..
நாளை 30.10.2023 திங்கட்கிழமை காலை 10.05 மணியளவில்
நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்..
தேவர் பெருமகனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம், என
ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.