வீட்டிலிருந்தே குறைகளை தெரிவிக்கும் 1100 எண் அறிமுகம் செய்த தமிழக முதல்வர் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
கோட்டைக்கு செல்லவே முடியாத ஸ்டாலினிடம் பொதுமக்கள் மனு அளித்து பயன் இல்லை..
திருச்சியில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கலந்தாய்வு கூட்டத்தில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பேச்சு..
தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிக்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிப்பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மண்டல பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான தங்கமணி வழிகாட்டுதலின்படி, அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், தனியார் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவை கொண்டு நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில்,
தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், தேவை, தொழில்நுட்பத்தை கையாள்வது, அவற்றைக் கொண்டு தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடத்தில் எவ்வாறு கொண்டு செல்வது, சமூக ஊடகங்களை கையாள்வது, தொழில் நுட்பம் சார்ந்த புதிப்பிக்கப்பட்ட கணினி மென்பொருட்கள் குறித்தும், அவற்றை கையாள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளங்களின் வாயிலாக மறைந்த தமிழக முதல்வரின் அழியாப் புகழை அகிலமெங்கும் எடுத்து செல்வது,
தலைமை அறிவிக்கின்ற சட்டமன்ற வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது,
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, 9.69 லட்சம் மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு, 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 2500 ரூபாய் ரொக்கம் வழங்கியது, 16.43 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி, விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது,
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மக்கள் நலத்திட்ட சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர் ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.