திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள சர்விஸ் சாலையால் 14.5 கி.மீ தூரம்
இருபுறம் உள்ள கடைகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு இல்லாமல் இருக்க பறக்கும் பாலம் அமைக்க கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், செயலாளர் செந்தில், பொருளாளர் தங்கராஜ், டோல்கேட் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் சம்சுதீன், மாரப்பன், காவிரி ரவிசங்கர் மற்றும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.