திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் அதிமுக ஒன்றிய, பகுதி,நகர பேரூர் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் தில்லைநகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .
இதில் அமைச்சர் வளர்மதி, எம்எல்ஏக்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் செல்வராஜ். சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அறிவழகன் விஜய், முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, டி.பி. பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏக்கள் பிரின்ஸ் தங்கவேல், இந்திராகாந்தி, ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

இந்தக் கூட்டத்தில்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 73 -வது பிறந்தநாளை யொட்டி
வருகிற 24 ந்தேதி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மணச்சநல்லூர், மற்றும் துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள், ஏழை, எளிய அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடவும்
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தும்,
விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் ,
202t ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு கழக பணியாற்றி 4 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கனியை முதல்வரிடம் சமர்ப்பிப்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.